சுயமரியாதை இயக்க பிரச்சாரமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது என்று பெரியார் நம்பிக்கொண்டிருந்தபோது ஆட்சி அதிகாரம் மூலமாகத்தான் சமூக மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று அண்ணா அரசியலில் இறங்கினார். சமூக மாற்றமே (social change) சமூக நீதியை (social equity/ justice) அடைய உதவும்.
நீதி கட்சி முதல் திராவிட கட்சிகள் வரையிலான சமூக நீதிக்கான பயணத்தில், கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, வாழ்வாதார மேம்பாடு என பல திட்டங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வெகுவாக சென்றடைந்தது. ஆனால் இவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சென்றடைந்ததா, அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததா என்று பார்த்தால் பிற்படுத்தபட்ட மக்களுக்கு கிடைத்த நன்மைகள் ஒடுக்கப்பட்டோருக்கு கடத்தப்படவில்லை என்பது தெளிவாக தெரியும். இதற்கு நிலவுடைமை, சமூக மூலதனம் (social capital) ஆகியவை முக்கிய காரணம். இதை பற்றி S நாராயன் IAS, வாஜ்பாய் ஆட்சியில் Finance Secretary ஆக இருந்தவர் அவரின் புத்தகத்தில் (The Dravidian Years) குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் கிடைக்கும் இட ஒதுக்கீடு மட்டும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கை தரம் உயர போதாது என்பது தெளிவாக தெரிகிறது. இன்றும் குடிசை மாற்று என்னும் பெயரில் அவர்கள் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக தள்ளப்படுவதும், நியாயமான கூலிக்காக போராடுவதும், அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தொழில் செய்வதும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சுயமரியாதையுடன் வாழ்வதும் ஒரு போராட்டமாக இருக்கிறது. அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமானது. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் ஒடுக்கப்பட்டவர்களை அவர்களுக்கான Reserved தொகுதிகளில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கிறது. மேலும் அவர்கள் விருப்புரிமையோடு (discretion) செயல்படுவதற்கு பல தடைகள் உள்ளன. அவர்களை ஒரு பதிலாளக (proxy) தான் பயன்படுத்துகிறார்கள். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒடுக்கப்பட்டோர்களின் பிரதிநிதித்துவம் reserved தொகுதிகலோடு மட்டும் முடங்கிவிடாமல் அவர்களின் எண்ணிக்கை உயர வேண்டும். அவர்களுக்கு தேவையான சட்ட திட்டங்களை அவர்களே வகுக்கும் வகையில் அவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வேண்டும்.
முக்கியமாக உள்ளாட்சி மன்றங்களில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவம் ஒரு பெரிய பங்காற்றுகிறது. உள்ளாட்சி மன்றங்கள் தான் அடிப்படையான அரசாட்சியாக விளங்குகிறது. மேலும் சாதிய ஏற்றத்தாழ்வின் அடிப்படையாக இருப்பது கிராமங்கள்தான். கிராம ஊராட்சி மன்றங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் பெறுவது அங்கு இருக்கும் சூழலுக்கு ஏற்ப அரசியல் செய்து அவர்களுக்கு சாதகமாக நிலைமையை மாற்ற உதவும். கிராமங்களில் சாதிய கட்டமைப்பு ஒழிய மாற்றங்கள் கொண்டுவர ஒடுக்கப்பட்டவர்களின் பங்கீடு மிக அவசியம். ஏனென்றால் அவர்கள் அனுபவிக்கும் வலியும் அவர்களுக்கு என்ன தேவை என்பதும் அவர்களுக்கு தான் தெரியும்.
இன்றும் கிராமங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு தடையாய் இருப்பது வேலை வாய்ப்பு தான். அவர்கள் சுயமரியாதை உடன் (dignity) வாழ 100 நாள் வேலை திட்டம் மிகவும் உதவுகிறது ஏனென்றால் ஒரு சாதிய பண்ணைக்காரர் ஒடுக்கப்பட்டவர்களை அநியாய கூலிக்கு உருட்டி மிரட்டி தனது வயல்களில் வேலை செய்ய ஆணையிட முடியாது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஒரு அடிப்படை கூலியை (basic Income) நிர்ணயிக்கிறது அதற்கு மேல் தான் எவரும் ஒரு கூலியை தர முடியும். எனவே 100 நாள் வேலை திட்டத்தின் மீது பல பண்ணைக்காரர்கள் வன்மத்தைக் கக்கிக் கொண்டிருப்பது சாதிய அடக்குமுறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்கள் வசிக்கும் கிராமங்களிலேயே சிறு தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
எனவே உள்ளாட்சி மன்றங்களில் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம், அவர்கள் கிராமங்களில் சுயமரியாதையுடன் வாழ தேவையான மாற்றங்களை செய்யவும், நகர்ப்புறங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நிலம் இல்லாமல் ஆதரவற்று நிற்பதை தடுக்கவும் உதவும். சாதிய ஏற்றத்தாழ்வின் ருசி கண்ட மக்கள் தாமாகவே சமூக மாற்றத்திற்கு தயாராக மாட்டார்கள். ஆட்சி அதிகாரத்தின் மூலமாகவும் சட்ட திட்டத்தின் மூலமாகவும் தான் சமூக மாற்றங்களை கொண்டு வர முடியும். பிறகு காலத்தின் கட்டாயத்தால் மக்கள் முதிர்ச்சி அடைந்து சமூக மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
அண்ணா சொன்னது போல் ஆட்சி அதிகார மாற்றம் தான் சமூக மாற்றத்தை உண்டாக்கும். அரசியலில் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் அந்த சமூக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமாகிறது. அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல் கிராமங்கள் அழிந்தால் தான் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அழியும் அதற்கு கிராமங்கள் நகர்புறங்களை போன்று (behavioral change) மாற்றங்கள் பெற வேண்டும். பெரியார் சொன்னது போல் மதம் அழியும் வரை சாதி அழிய போவதில்லை மதத்தை ஒழிக்க கடவுளை ஒழிக்க வேண்டும். கடவுளின் பெயரால் நடக்கும் சாதி மத ஏற்றத்தாழ்வுகள் ஒழிய ஒரு சமூகமாக நாம் பாடுபட வேண்டும். கடவுள் மறுப்பு, பகுத்தறிவு சிந்தனை, சாதி ஒழிப்புக் கொள்கைகள் நூற்றாண்டு கடந்து இன்றும் தேவைப்படுகிறது.
https://www.thehindu.com/opinion/op-ed/the-problems-with-sub-caste-reservations/article68414100.ece
ReplyDelete