Skip to main content

Posts

Showing posts from July, 2023

சமூக நீதி - அரசியல் பிரதிநிதித்துவம்

சுயமரியாதை இயக்க பிரச்சாரமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த போதுமானது என்று பெரியார் நம்பிக்கொண்டிருந்தபோது ஆட்சி அதிகாரம் மூலமாகத்தான் சமூக மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று அண்ணா அரசியலில் இறங்கினார். சமூக மாற்றமே (social change) சமூக நீதியை (social equity/ justice) அடைய உதவும். நீதி கட்சி முதல் திராவிட கட்சிகள் வரையிலான சமூக நீதிக்கான பயணத்தில், கல்வி வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, வாழ்வாதார மேம்பாடு என பல திட்டங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வெகுவாக சென்றடைந்தது. ஆனால் இவை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சென்றடைந்ததா, அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததா என்று பார்த்தால் பிற்படுத்தபட்ட மக்களுக்கு கிடைத்த நன்மைகள் ஒடுக்கப்பட்டோருக்கு கடத்தப்படவில்லை என்பது தெளிவாக தெரியும். இதற்கு நிலவுடைமை, சமூக மூலதனம் (social capital, term introduced by CJI D Y Chandrachud) ஆகியவை முக்கிய காரணம். இதை பற்றி S நாராயன் IAS, வாஜ்பாய் ஆட்சியில் Finance  Secretary ஆக இருந்தவர் அவரின் புத்தகத்தில் (The Dravidian Years) குறிப்பிட்டுள்ளார். இதன் மூலமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் கிடைக்கும் இட ஒதுக்கீடு மட்டும்